சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மச்சேந்திரன் தலைமை தாங்கினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாவாடை, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டசெயலாளர் பழனி, மாநில செயலாளர் மனோகரன், ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டதலைவர் புருஷோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினர்.
முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான மாதாந்திர ஓய்வூதியம் 7,850 ரூபாய், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது