பைப்புகளில் அடைப்பு நீக்கம்

நடுவீரப்பட்டு: நரிமேடு பாலத்தின் பைப்புகளில் இருந்த அடைப்புகள் 'தினமலர் செய்தி எதிரொலி காரணமகாக அதிகாரிகள் அகற்றினர்.நடுவீரப்பட்டு அடுத்த நரிமேடு-இடையர்குப்பம் இடையில் உள்ள தரைபாலத்தின் பைப்புகளில் கடந்த ஆண்டு பெய்த மழையில் அடித்து வரப்பட்ட மரங்கள், கழிவுகள் சிக்கிக் கொண்டது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலி காரணமாக நேற்று மதியம் பைப்புகளில் இருந்த அடைப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் அகற்றி தீ வைத்து எரித்தனர்.

Advertisement