மணல் கடத்திய டிரைவர் கைது

பரங்கிப்பேட்டை: லாரியில் சவுடு மணல் கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சவுடு மணல் ஏற்றி வந்த லாரியை, அகரம் வி.ஏ.ஓ., சிவகுமார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தார்.

அப்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் வழங்கப்பட்ட பர்மிட் தேதியை திருத்தி, லாரி டிரைவர் வில்லியநல்லுார் ராஜ்குமார், 35; சவுடு மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தார்.

Advertisement