துணை அஞ்சலகங்களில் 1ம் தேதி ஆதார் சிறப்பு முகாம் துவக்கம்

கடலுார்: அண்ணாமலை பல்கலைக்கழக துணை அஞ்சலகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் துணை அஞ்சலகத்தில் வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இதுகுறித்து கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

அஞ்சல்துறையின் புரோஜெக்ட் ஏரோ 2.0 திட்டத்தின் கீழ் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சலகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் துணை அஞ்சலகங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட துவங்கியுள்ளது.

இரண்டு அலுவலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம், வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் இலவசமாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய 50 ரூபாய், , பயோமெட்ரிக் திருத்தம் செய்ய 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். தேவைப்படுவோர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement