சுவர்ணகடேஸ்வரருக்கு மண்டலாபிஷேகம் நிறைவு

விருத்தாசலம்: பூதாமூர் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் நடந்த மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் பூதாமூரில் உள்ள சுவர்ணகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்., 8ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு மண்டல அபிஷேக விழா தினசரி நடந்து வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

இதையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, சர்வ தேவதா பூர்வாங்க பூஜை, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, சுவர்ணகடேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி, தீபாரதனை நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் சுவர்ணகடேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement