மயான கொள்ளை உற்சவம்

பண்ருட்டி: காங்கேயன்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த தோராட்டத்தில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

Advertisement