விழிப்புணர்வு பிரசாரம் : கடலுாரில் வரவேற்பு

கடலுார்: கடலுாரில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை சார்பில் நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா' என்ற தலைப்பில் மார்ச் 7ம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரண்டு பிரிவுகளாக விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் துவங்கப்பட்டது.

குஜராத்தில் துவங்கிய சைக்கிள் பயணக்குழுவினர் நேற்று முன்தினம் கடலுார் வந்தடைந்தனர். குழுவினருக்கு கடலுார் ஆல்பேட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதன்மை கமாண்டர் நவ்தீப்சிங், முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க நிர்வாகி மிலிட்ரி பாபு, வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், இயக்குனர் சரவணன், ஷைன் இந்தியா சோல்ஜர்கள் சமூக நல அமைப்பின் ஆலோசகர் சத்தியநாராயணன், ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன், கலாச்சாரப்பிரிவு சங்கர் மற்றும் நிர்வாகிகள் பயணக்குழுவினருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

Advertisement