பாலுார் அரசு பள்ளி ஆண்டு விழா

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளமதி முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் பழனிவேல் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சாந்தகுமார், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.

ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Advertisement