வேர்க்கடலையில் 'வெரைட்டி' காட்டலாமா!

கையில் ஒரு பொட்டலம் வறுத்த வேர்க்கடலையை வைத்து கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால் நேரம் செல்வதே தெரியாது. வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான புரதம், நார்சத்து, வைட்டமின் கிடைக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. தோல், முடி,எலும்புகளை வலுவாக்குகிறது. வேர்க்கடலை வெறுமனே சாப்பிடவும், சட்னி செய்யவும் பயன்படுகிறது என்று நாம் நினைத்து இருப்போம். ஆனால் வேர்க்கடலையை வைத்து நிறைய வெரைட்டி செய்யலாம்.

வேர்க்கடலை பால்



முந்திரி, பாதாமை நன்கு வறுத்து சூடாக்கி, வேர்க்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

பின், நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்தால், வேர்க்கடலை பவுடர் கிடைக்கும்.

ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சேர்த்து பருகினால் புரதச்சத்து கிடைக்கும்.

வேர்க்கடலை அல்வா



தோல் நீக்கிய வேர்க்கடலை, மைதா, சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, அரைத்த கலவையை சேர்த்து, நெய்யை அடிக்கடி ஊற்றிக் கிளறவும். கெட்டியான பின், ஒரு தட்டில் நெய் ஊற்றி கத்தியால் சமமான வெட்டி விட்டால் அல்வா தயார்.

வேர்க்கடலை கேரட் சட்னி



ஒரு கப் துருவிய கேரட், அரைகப் வேர்க்கடலை. ஒரு தேக்கரண்டி முந்திரி, நான்கு காய்ந்த மிளகாய், சிறிது புளி, உப்பு தேவைப்படுகிறது. வாணலியில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், புளியை போட்டு வறுக்கவும், இந்த கலவையுடன் துருவிய கேரட், கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து கலந்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து, வாணலியில் போட்டு கடுகு சேர்த்து தாளித்தால் சட்னி ரெடி.




- நமது நிருபர் -

Advertisement