வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம்: குப்பநத்தம் அரசு துவக்க பள்ளியில் வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமம் ஜே.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் வேளாண் மாணவர்கள், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குப்பநத்தம் அரசு துவக்க பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு, தண்ணீர் சேமிப்பு, தினசரி உணவு முறை உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விவசாயத்தின் முக்கியத்துவம், மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விளக்கினர். மாணவிகள் சுஷ்மிதா, உம்முஹானி, வைஷ்ணவி, வினோதினி, யோகேஸ்வரி, யுவ�, � சாய், நிக்கித்தா ஹாஸ் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement