பண்ருட்டியில் வரி வசூலில் அடாவடி கூடாது

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி இயல்பு கூட்டம் நேற்று நடந்தது.
சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் கண்ணன், துணை சேர்மன் சிவா, உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஆனந்தி (தி.மு.க.,) : முதல்வர் ஸ்டாலின் பஸ் நிலையம், மார்க்கெட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பணிகள் துவங்கவில்லை.
கலைவாணி (தி.மு.க.,): கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.
கிருஷ்ணராஜ் (வி.சி.,): எனது வார்டில் சாலை வசதி, தெருமின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
சண்முகவள்ளி (தி.மு.க.,) : சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தியவர்களுக்கு பெயர் மாற்றம் செய்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
சோழன் (தி.மு.க.,) : சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி ஆட்டோ ஸ்டேண்ட் செயல்படுகிறது. போக்குவரத்து போலீசார் செயல்படுவதுபோல் தெரியவில்லை.
ராமலிங்கம் (தி.மு.க.,) : பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கட்டுபடுத்த வேண்டும்.
சேர்மன் ராஜேந்திரன் பேசுகையில், 'பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். தொழில் வரி குறைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கும் போது கனிவாக பேசி வரியை பெற வேண்டும். அடாவடியில் ஈடுபடக்கூடாது' என்றார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது