மாணவர்கள் காப்பியடிப்பதை ஊக்குவிக்கும் மினி ஜெராக்ஸ்

கடலுார்: தமிழகத்தில் அரசு பொதுதேர்வில் 'பிட்' அடிப்பதை தடுக்க மினிஜெராக்ஸ் போடுவதை அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 அரசு பொதுதேர்வு முடிந்து,நேற்று முதல் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு நடந்து வருகிறது. கடந்த காலங்களில் அரசு தேர்வில் 'பிட்' அடிக்க விரும்பும் மாணவர்கள் புத்தகங்களை கிழித்தும், உடலில் எழுதியும் தேர்வு மையத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரியாமல் 'பிட்' அடிப்பார்கள்.
ஆனால் தற்போது நடக்கும் அரசு தேர்வுகளில் அதிகளவு மாணவர்கள் புத்தகங்களை மினி ஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்து தேர்வு எழுதுவதாக பல பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
புத்தகங்களை கிழித்து எடுத்து வருவது எல்லாம் பழைய மாடல் என்றும்,எங்களுக்கு எப்போதும் ஜெராக்ஸ் கடைகாரர்கள் தெய்வம் என்று மாணவர்கள் பேசி வருகின்றனர்.
மாணவர்கள் படித்து தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டுவதை விட, மினிஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்து காப்பியடிப்பதை பரவலாக பார்க்க முடிகிறது. தேர்வு முடிந்து வெளியில் வரும் மாணவர்கள், தாங்கள் எடுத்து சென்ற மினிஜெராக்ஸ்களை தேர்வு மையத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.
ஜெராக்ஸ் கடைகாரர்கள் சிறிய வருமானத்திற்காக மாணவர் சமுதாயத்தை வீணாக்கி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் ஜெராக்ஸ் கடைகளில் மினி ஜெராக்ஸ் போடுவதை தடை செய்ய வேண்டும்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது