காரசாரமான சிறுநெல்லி ஊறுகாய்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான், நீண்ட ஆயுள் தரும்நெல்லிக்கனியை அவ்வையாருக்கு பரிசாக வழங்கி னார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட கனியை நாமும் உண்டு, நீண்ட காலம், நோய் நொடியின்றி உயிர் வாழ்வது நமக்கு கிடைத்த பாக்கியம் ஆகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பெரிய நெல்லிக்காய்; மற்றொன்று சிறு நெல்லிக்காய். இவை இரண்டிலும் சம அளவில் சத்துக்கள் உள்ளன. இந்த சிறு நெல்லிக்காயை சாப்பிடுவதையே பெரும்பாலானோர் விரும்புவர்.

பொதுவாக பலரும் உப்பு, மிளகாய் துாள் போட்டு சாப்பிடுவர். இப்படி சாப்பிடும் போது, அதிகமாக சாப்பிட முடியாது. ஆனால், அதுவே சிறு நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால், அதிகமாகவும் உண்ண முடியும்.

அதே சமயம் சாப்பாட்டுக்கு, தொட்டுக்கவும் வைத்துக் கொள்ளலாம். இதை பல மாதங்கள் வைத்து கூட சாப்பிடலாம்.

செய்முறை:



ஒரு வாணலியில் வெந்தயம், கடுகு சேர்த்து பொன் நிறமாகும் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். இதை சற்று நேரம் ஆற வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். இதில், கழுவி வைத்த நெல்லிக்காய்களை போட்டு தாளிக்கவும்.

நெல்லிக்காயின் நிறம் மாறியதும் குழம்பு மிளகாய் துாள், பெருங்காய் துாள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தின் போது, எது பற்றியும் யோசிக்காமல் உடனடியாக வாணலியை அடுப்பில் இறந்து இறக்க விடவும்.





- நமது நிருபர் -

Advertisement