மிகவும் பயனுள்ளதாக இருந்தது மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

கோவையில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
'முழுமையான தகவல்கள்'
துறை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்நிகழ்வில் பங்கேற்றேன். பல்வேறு புதிய தகவல்களை தெரிந்துகொண்டேன். கல்விக்கடன் சார்ந்த முழுமையான தகவல்களும் தெரிந்துகொள்ள முடிந்தது.
-ஹர்ஷினி, கோவில்பாளையம்
'ஒரே இடத்தில் அனைத்தும்'
பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன். ஆன்லைனில் பல கல்லுாரிகளில் இந்த பாடப்பிரிவு உள்ளதா என, தேடினோம். இங்கு, ஒரே இடத்தில் இத்துறை உள்ள கல்லுாரிகளை நேரடியாக பேசி, விபரங்களை தெரிந்துகொண்டோம். மிகவும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது.
- ராகவி, சுந்தராபுரம்
'நுணுக்கமான விபரங்கள்'
மருத்துவ படிப்பு எடுக்கவுள்ளேன். நீட்., தேர்வுக்கு தயாராவது குறித்து சில நுணுக்கமான தகவல்களை தெரிந்துகொண்டேன். நீட்., இல்லாமலும், பல்வேறு மருத்துவ படிப்புகள் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
- பிரஜின், திருப்பூர்
'சந்தேகம் தீர்ந்தது'
மூன்று நாள் நிகழ்வில், இரண்டு நாட்கள் முழுமையாக பங்கேற்று வல்லுநர்கள் தகவல்களை தெரிந்துகொண்டேன். தொழில்நுட்பம் குறித்து நான் எதிர்பார்த்ததை விட அதிகம் தெரிந்துகொள்ள இந்நிகழ்வு உதவியாக இருந்தது. கல்விக்கடன் குறித்து எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது.
- ரமணபாரதி, திருப்பூர்
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது