அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள சித்தி வயலில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிரம்பவயல் ஊராட்சி சித்திவயலில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் நுாலகம் அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவ்விடத்தில் தற்போது பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு தாசில்தார் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Advertisement