சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில், சிலர் இரவில் மண்ணை லாரிகளில் கடத்தி வருகின்றனர். ஆனால் வருவாய்த்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்குள்ள மண்ணை சிலர் இரவில் லாரிகளில் கடத்தி வருகின்றனர். சிறுமுகை அடுத்த சிட்டேபாளையம் அருகே பெரியதோட்டம் என்ற இடத்தில், ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள மண்ணை இரவில் லாரிகளில் சிலர், நீண்ட காலமாக கடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெத்திக்குட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''சிட்டேபாளையம் பெரியதோட்டம் பகுதியில், அரசு நிலத்திலிருந்து லாரிகளில், சிலர் மண்ணை கடத்தி வருகின்றனர்.
இதை கண்காணிக்க வேண்டிய வருவாய் துறையினர், கண்டு கொள்ளாமல் உள்ளனர். உடனடியாக மண் கடத்தலை தடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி லாரிகளை சிறை பிடிக்கப்படும்,'' என்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது