பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு   209 பேர் ஆப்சென்ட்

சிவகங்கை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நேற்று பள்ளி, தனி தேர்வர்கள் 17,841 மாணவர்களில் 209 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேற்று தொடங்கி, ஏப்., 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை அரசு, உதவி பெறும், நகராட்சி, மெட்ரிக் சுய நிதி பள்ளிகள் என 278 பள்ளிகளை சேர்ந்த 8,941 மாணவர், 8,932 மாணவிகள் என 17,873 பேர் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 6 மையத்தில் 183 பேர் எழுதுகின்றனர். மாவட்ட அளவில் 105 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகின்றன.

தமிழ் தேர்வு



நேற்று முதல் நாள் நடந்த தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,815 மாணவர், 8,860 மாணவிகள் என 17,675 பேர் மட்டுமே எழுதினர். இதில் 123 மாணவர், 69 மாணவிகள் என 192 பேர் ஆப்சென்ட், தனித்தேர்வராக 120 மாணவர், 46 மாணவிகள் என 166 பேரில் 14 மாணவர், 3 மாணவிகள் என 17 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

Advertisement