தொழில் வளர்ச்சி கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பில் இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து மேம்பட்ட பொருட்கள் உற்பத்தி, தொழில் நிலையான வளர்ச்சி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது.

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். டீன் ஆறுமுகப் பிரபு வரவேற்றார்.

மாநாடு அமைப்பாளர் செந்தில் முத்து குமார் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்சீரம் ராமகிருஷ்ணா, பேராசிரியர்கள் பேசினர். துறை தலைவர் ஆதம் கான் நன்றி கூறினார்.

Advertisement