ரத்தினம் கல்லுாரியில் முப்பெரும் விழா

கோவை : ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில்,ஆண்டுவிழா, வாகை சூடு, பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
ஆண்டு விழாவில், 'குளோபல் எமெர்ஜிங் டேலன்ட் சர்வீஸ் நவ்' என்ற முன்னணி நிறுவனத்தின் முதன்மை மேலாளர் கோகுலக்கண்ணன் நரசிம்மன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இறுதித் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
'வாகை சூடு' நிகழ்வில், தமிழக அரசின் மேல்நிலைகல்வித்துறையின் இணை இயக்குனர் விஜய குமார், மாணவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில், 'கேட் டீ ப்ளஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின், இந்திய செயல் இயக்குநர் மகேஷ் ராஜன்,300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குபட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா, துணைத் தலைவர் நாகராஜ், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது