குமரகுரு கல்லுாரியில் 'டேன்கேம் ஹேக்கத்தான்'

கோவை : குமரகுரு பொறியியல் கல்லுாரியில், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், 'டேன்கேம்' சார்பில், ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில்,'தசால்ட் சிஸ்டம்' நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் பிரவீன் பகோஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழகம் முழுவதும் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டகல்லுாரிகளைச் சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்கள்,350 குழுக்களாக பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுத்தொகையாக ரூ. 3.2 லட்சம் வழங்கப்பட்டது.
டேன்கேம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய தீபன்,ஹேக்கத்தான் போட்டியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியமாணவர்கள், 15 பேருக்கு இன்டன்ஷிப் வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
குமரகுரு பொறியியல் கல்லுாரியின் திட்ட இயக்குனர் ரகுபதி, டேன்கேம்நிறுவனத்தின் கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை உறவுகளின் துணைத் தலைவர் தென்றல் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது