பட்டாசு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மின்கசிவு தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவிந்தநல்லுாரில் 3 மாதங்களாக பூட்டிக்கிடந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் அருகே கோவிந்தநல்லுாரியில் சிவகாசியை சேர்ந்த அற்புதராஜ் 52, என்பவருக்கு சொந்தமான அலெக்ஸா டியூப் ஒர்க்ஸ் எனும் பட்டாசுகளுக்கு தேவையான அட்டை குழாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
நேற்று மதியம் 12:30 மணிக்கு இந்த அட்டைக்குழாய் கம்பெனியில் திடீரென தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர்.
உற்பத்தி சாதனங்கள்,தகர செட், கூரை ஆகியவை இடிந்து தரைமட்டமாகியது. மூன்று மாதங்களாக இந்த நிறுவனம் மூடிக்கிடந்ததால் ஆட்கள் யாருமில்லை. உயிர் சேதமும் இல்லை.
இந்நிலையில் பூட்டிக்கிடந்த இந்த கம்பெனியில் மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது