பல்லாங்குழி ரோட்டில் வாகன ஓட்டிகள் தவிப்பு

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரோட்டில், பெரியபாளையம் அருகே ரோட்டின் மையத்தில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலியானதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எஸ்.பெரியபாளையம் அருகே, ரோடுபல இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால், இரவு நேரங்களில் டூ வீலரில் சென்று வருவோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எஸ்.பெரியபாளையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை ரோடு பராமரிப்பின்றி இருக்கிறது. ரோட்டில், அதிக அளவு குழிகள் இருப்பதால், டூ வீலரில் சென்று வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சிறப்பு கவனம் செலுத்தி, ரோட்டை சீரமைக்க வேண்டும்; விபத்தை நடப்பதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement