பல்லடத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

பல்லடம் : பல்லடம் அரசு கல்லுாரியில் இன்று நடக்கவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு கல்வி தகுதி கொண்ட, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இன்று (29ம் தேதி) காலை, 10.30 முதல் மாலை 3.00 மணி வரை இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

Advertisement