கிருஷ்ணகிரியில் பிளம்பர்களுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை வகுப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் மற்றும் சம்ருத்தா, அன்னை டிரஸ்ட் ஆகியவை இணைந்து, பிளம்பர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை வகுப்பை நடத்தியது.
மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் சீனப்பகவுடு, கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் தாமோதரன் சிறப்பாளராக பங்கேற்றார்.
ஜெய்சங்கர், கலைவாணி சுப்பிரமணி, அமுதா, சர்த்தார் கிசான் டாக்கர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பிளம்பர்கள் உயரமான கட்டடங்களில் பணியாற்றும் போது, எந்த அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்புடன் பணி மேற்கொள்வது குறித்தும், சங்க உறுப்பினர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள், விபத்து காப்பீடு திட்டத்தில் எவ்வாறு விண்ணப்பித்து பயன்பெறுவது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
முதல் முறையாக நடந்த பயிற்சியில், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அனைத்து பிளம்பர்களுக்கும் சான்றிதழ், டூல்ஸ் கிட் வழங்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை!
-
ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
-
திணறிய கோல்கட்டா : மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா