மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா

லண்டன்: பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து, பிரைமார்க் தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா செய்துள்ளதாக அசோசியேட்டட் பிரிட்டிஷ் புட்ஸ் (ஏ.பி.எப்) நிறுவனம் தெரிவித்துள்ளது.


வேளாண் உணவு நிறுவனமான ஏ.பி.எப்., அயர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டது. 17 நாடுகளில் இயங்குகிறது. 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பால் மர்ச்சண்ட், பிரைமார்க் நிறுவனத்தின் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைமை நிர்வாகியாக 16 ஆண்டு பணிபுரிந்தார். அவர் மீது பெண்ணிடம் பொருத்தமற்ற நடத்தை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உள் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பிரைமார்க் செயல்திறன் சரிவு மற்றும் ஆசியா, ஐரோப்பா மார்க்கெட்டுகளில் விற்பனை குறைவு போன்ற சவால்களை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரது பதவில விலகல் உடனடியாக நடைபெறும்.


மார்ச்சண்ட் விசாரணைக்கு ஒத்துழைத்தார், தவறை ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது நடவடிக்கைகள், நிறுவனம் எதிர்பார்த்த தரத்திற்குக் கீழே இருந்தது.சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இருந்த போதிலும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரைமார்க் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கும் வரை, நிறுவனத்தின் பிற மூத்த நிர்வாகிகள் பொறுப்பை கவனிப்பார்கள்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement