நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: சாப்மேன் சதம் விளாசல்

நேப்பியர்: மார்க் சாப்மேன் சதம் விளாச நியூசிலாந்து அணி 73 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
சாப்மேன் அபாரம்: நியூசிலாந்து அணிக்கு வில் யங் (1), நிக் கெல்லி (15), ஹென்றி நிக்கோல்ஸ் (11) ஏமாற்றினர். இர்பான் கான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாப்மேன், ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். மிட்செல் (76) அரைசதம் கடந்தார். சாப்மேன், 132 ரன்னில் (6 சிக்சர், 13 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அறிமுக வீரராக அசத்திய முகமது அபாஸ், 26 பந்தில், 52 ரன் (3 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 344 ரன் எடுத்தது.
பாபர் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் (36), உஸ்மான் கான் (39) நல்ல துவக்கம் கொடுத்தனர். பாபர் ஆசம் (78), சல்மான் ஆகா (58) அரைசதம் கடந்தனர். கேப்டன் முகமது ரிஸ்வான் (30) ஓரளவு கைகொடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 44.1 ஓவரில் 271 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தானில் பிறந்த முகமது அபாஸ் 21, நேற்று நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். இவர் (52), அறிமுக ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் (24 பந்தில்) விளாசிய வீரரானார். இதற்கு முன் இந்தியாவின் குர்ணால் பாண்ட்யா (26 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2021, புனே) இச்சாதனை படைத்திருந்தார்.
மேலும்
-
அதிபர் டிரம்ப் நலம்; இந்தியா நலமா?
-
வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,921!
-
பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி
-
பிரிட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா
-
தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்
-
தமிழக நிதியை ஒடிசா, உ.பி.,க்கு நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்