தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்

18

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 01) முதல் 40 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.


@1brதமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று (ஏப்ரல் 01) முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து இருந்தது.

அந்த வகையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் - புழல் நெடுஞ்சாலை, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் இன்று முதல் வசூல் செய்யப்படுகிறது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலானது.



இந்த கட்டண நடைமுறை, 2026ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement