சரத் கமல் 'குட்-பை': டேபிள் டென்னிஸ் அரங்கில் இருந்து

சென்னை: டேபிள் டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் சரத் கமல்.
இந்திய அனுபவ டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தின் அஜந்தா சரத் கமல் 42. கடந்த 1999ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், 10 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஐந்து முறை (2004, 2008, 2016, 2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
சென்னையில் நடந்த டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஸ்னேஹித் மோதினர். இதில் ஏமாற்றிய சரத் கமல் 0-3 (9-11, 8-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இத்தொடருடன் ஓய்வை அறிவித்திருந்த இவர், சொந்த மண்ணில், தனது கடைசி போட்டியில் பங்கேற்றார். இவரது முதல் சர்வதேச போட்டியும் சென்னையில் தான் நடந்தது. இருபது ஆண்டுகளுக்கு மேலான சரத் கமலின் பயணம் நிறைவு பெற்றது.
இதுகுறித்து சரத் கமல் கூறுகையில், ''நீண்ட காலம் போட்டியில் பங்கேற்பது எளிதானதல்ல. இதற்கு உடல், மனவலிமை அவசியம். சத்யன், ஹர்மீத், மானவ், மானுஷ், ஸ்னேஹித் என திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர். இந்திய டேபிள் டென்னிசை பாதுகாப்பான கைகளில் விட்டுச் செல்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாதது ஏமாற்றம்,'' என்றார்.
'பயோ-டேட்டா'
பெயர்: அஜந்தா சரத் கமல்
பிறந்த நாள்: 12-07-1982
பிறந்த இடம்: சென்னை
வென்ற பதக்கம்:
காமன்வெல்த் விளையாட்டு- 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்
ஆசிய விளையாட்டு- 2 வெண்கலம்
ஆசிய சாம்பியன்ஷிப்- 4 வெண்கலம்
விருது:
அர்ஜுனா (2004)
பத்ம ஸ்ரீ (2019)
'கேல் ரத்னா' (2022)
அரையிறுதியில் மானவ்
ஆண்கள் ஒற்றையர் 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் மானவ் தாக்கர், ஜெர்மனியின் ஆன்ட்ரி பெர்டெல்ஸ்மியர் மோதினர். இதில் மானவ் 3-2 (10-12, 12-10, 15-13, 6-11, 11-5) என வெற்றி பெற்றார். தவிர இவர், இத்தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரரானார். அடுத்து நடந்த காலிறுதியில் மானவ் 3-2 (5-11, 12-10, 3-11, 11-6, 11-1) என தென் கொரியாவின் ஜோங்ஹூன் லிம்மை வீழ்த்தினார்.
மேலும்
-
அதிபர் டிரம்ப் நலம்; இந்தியா நலமா?
-
வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,921!
-
பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி
-
பிரிட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா
-
தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்
-
தமிழக நிதியை ஒடிசா, உ.பி.,க்கு நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்