அதிகரித்த பெங்களூரு பலம் * மகிழ்ச்சியில் டிவிலியர்ஸ்

சென்னை: ''முன்பு இருந்ததை விட, பெங்களூரு அணியின் பலம், 10 மடங்கு அதிகரித்துள்ளது,'' என டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த பிரிமியர் போட்டியில் ரஜத் படிதர் தலைமையிலான பெங்களூரு அணி, 50 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை சாய்த்தது. 2008க்குப் பின் சென்னை அணியை சொந்தமண்ணில் (சேப்பாக்கம் மைதானம்) வீழ்த்தியது.
இதுகுறித்து பெங்களூரு அணி முன்னாள் வீரர், டிவிலியர்ஸ் கூறியது;
கடந்த ஆண்டு ஏலம் நடந்த போது, ' தேவையான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பெறச் செய்யும் திறன் கொண்ட வீரர்கள் தான் பெங்களூரு அணிக்கு தேவை. குறிப்பிட்ட பவுலர்கள், பேட்டர்கள், பீல்டர்கள் என பார்த்து தேர்வு செய்ய வேண்டாம்,' என்றேன்.
தற்போதுள்ள சரியான 'பேலன்ஸ்' கொண்ட அணியாக, பெங்களூரு உள்ளது. இதற்கு முன் இருந்ததை விட 10 மடங்கு பலம் அதிகரித்துள்ளது. முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் பங்கேற்கவில்லை. சென்னைக்கு எதிராக சேர்க்கப்பட்ட இவர், அணிக்கு என்ன தேவையோ, அதை சரியாக செய்து கொடுத்தார். இது தான் 'பேலன்ஸ்'.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement