ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

அம்மான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் நேற்று களமிறங்கிய ஐந்து இந்திய வீரர்களும் பதக்கம் வாய்ப்பை இழந்தனர்.
ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில் நடக்கிறது. இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன.
65 கிலோ காலிறுதியில் இந்தியாவின் சுஜீத், 0-9 என ஜப்பானின் கெய்செய்யிடம் தோல்வியடைந்தார். அடுத்து ரெப்பிசாஜ் போட்டியிலும் உஸ்பெகிஸ்தானின் ஜலோலோவிடம் வீழ்ந்து, பதக்க வாய்ப்பை இழந்தார்.
மற்ற இரண்டு காலிறுதி இந்தியாவின் சந்திரமோகன் ((79 கிலோ), ஜாய்ன்டி குமார் (97) தோல்வியடைந்தனர். இந்திய வீரர் விஷால் காளிரமணா (70) தகுதிச்சுற்றில், 0-8 என மங்கோலியாவின் துல்கா டோமரிடம் தோற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிராக் (62), 0-10 என கிர்கிஸ்தானின் அல்மாசிடம் தோல்வியடைந்தார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை, இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் வென்றுள்ளது.
மேலும்
-
அதிபர் டிரம்ப் நலம்; இந்தியா நலமா?
-
வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,921!
-
பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி
-
பிரிட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா
-
தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்
-
தமிழக நிதியை ஒடிசா, உ.பி.,க்கு நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்