ஆசிய தடகளம்: அங்கிதா தகுதி

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் 'மான்கிரம் இன்விட்டேஷனல்' தடகள போட்டி நடந்தது. கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அங்கிதா தயானி, இம்முறை 3000 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார்.
இவர், 9 நிமிடம் 44.05 வினாடி நேரத்தில் வந்து, முதலிடம் பிடித்தார். தவிர, தனது முந்தைய நேரத்தை விட, 9 வினாடி குறைவாக கடந்து அசத்தினார். கடந்த மாதம் தேசிய விளையாட்டில் அங்கிதா 9 நிமிடம், 53.63 வினாடி நேரத்தில் ஓடினார்.
இதையடுத்து தென் கொரியாவில் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 27-31) தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement