பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா

புதுடில்லி: பாலியல் குறித்து ஆபாச கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கினார் பிரபல யூடியூபர் அபூர்வா மகிஜா.

டில்லியைச் சேர்ந்த அபூர்வா முகிஜா, ஜெய்ப்பூரில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் பி.டெக் முடித்த பிறகு மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

அபூர்வா "ஐய்யோ ஷ்ரத்தா" என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய நடுத்தர வர்க்க வாழ்க்கையை நகைச்சுவையாக சித்தரித்து பிரபலமானார்.

'தி ரெபெல் கிட்' என்று அழைக்கப்படும் அபூர்வா முகிஜா, சமூக ஊடகங்களில் நன்கு அறியப்பட்டவர். இவர்,நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியான 'இண்டியாஸ் காட் லேடன்ட்' நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பணியாற்றினார், இந்நிகழ்ச்சியில்,ரன்வீர் அல்லாபாடியா பெற்றோர் மற்றும் பாலியல் குறித்து ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையில் சிக்கியது.இது அவரை ஆன்லைன் விவாதங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், அபூர்வா முகிஜா,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அனைத்து போஸ்ட்களையும் நீக்கியுள்ளார், இது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் இதற்கான காரணத்தை இன்னும் பொதுவாக விளக்கவில்லை என்றாலும், இது ஆன்லைன் விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கலாம்.

அவரது திடீர் போஸ்ட் நீக்கல் ரசிகர்களை ஆர்வமாக வைத்துள்ளது, பலர் அவரது புதிய திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் யாரையும் பின்தொடர்வதையும் அவர் நிறுத்திவிட்டார், ஆனால் இன்னும் 30 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement