பரங்கிமலை ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பரங்கிமலை, பரங்கிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
அதில், ஐக்கிய நாடுகளின் சபையின் 'பனிப்பாறை பாதுகாப்பு' எனும் கருப்பொருளை ஒட்டி, மழைநீர் சேமிப்பு, நீர் சிக்கனம், நீர் வீணாவதை தடுத்தல், நீர் மறுசுழற்சி, நிலத்தடி நீரை செறிவூட்டல் உட்பட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவிலம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், புதிய மின் கம்பம் அமைத்தல், பூங்கா கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறத்தல், மழைநீர் வடிகால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சித்தாலப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்மங்கலம் கூட்டத்தில், நன்மங்கலம்- - குரோம்பேட்டை சாலையை சீரமைத்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேடவாக்கத்தில் நடந்த கூட்டத்தில், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் இணைப்பு, தெரு நாய்கள் கட்டுப்பாடு, மாடுகளின் தொல்லை குறித்த புகார்கள் மட்டும் பெறப்பட்டன.
மேலும்
-
பிராமணர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் கட்சிக்கே ஓட்டு
-
ஐஸ்கிரீமில் டிடெர்ஜென்ட் பவுடர் உணவு பாதுகாப்பு துறை கண்டுபிடிப்பு
-
தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய பெங்., தம்பதி
-
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
-
செய்திகள் சில வரிகளில்
-
ஓலா, ஊபர் டிரைவர்கள் அடாவடி போக்குவரத்து கமிஷனர் கண்காணிப்பு