மாநில பொது அறிவு போட்டியில்பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம்


மாநில பொது அறிவு போட்டியில்பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம்


பெருந்துறை:ஈரோடு ஜே.சி.ஐ. எக்ஸல் அமைப்பு, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, மாநில அளவிலான பொது அறிவு மற்றும் திருக்குறள் போட்டிகளை அண்மையில் நடத்தியது.
இதில், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேனிலை பள்ளியை சேர்ந்த, 662 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் ஆறு பேர் மாநில அளவில் முதலிடம், ஆறு பேர் இரண்டாமிடம், 20 பேர் மூன்றாமிடம் பெற்றனர். 44 பேர் மாவட்ட அளவிலும், 26 பேர் எக்ஸல் பரிசும் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சுழற்கோப்பையை பெற்றனர்.
இதற்கான பரிசளிப்பு விழா, ஈரோடு வேளாளர் தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்தது. சிறப்பாளராக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர், ஜேசிஸ் மண்டல தலைவர் கெளசிக், ஈரோடு கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவ, -மாணவியர், பயிற்சி ஆசிரியர்களை பள்ளி தலைவர் யசோதரன், துணைத் தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராமலிங்கம், பள்ளி நிர்வாகக்குழுவினர், முதல்வர் முத்து சுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement