போதை ஊசி பாதிப்பு சிறுவன் 'அட்மிட்'

வியாசர்பாடி,
வியாசர்பாடி, சமாந்திபூ காலனியைச் சேர்ந்தவர் மணிமாலா, 40; இரண்டு மகன்கள் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, மணிமாலா வீட்டருகே உள்ள 'பிரைட் ரைஸ்' கடையில் பணிபுரிகிறார்.

இவரது 15 வயது இளைய மகன், 9ம் வகுப்பில் படிப்பை நிறுத்தி, நண்பருடன் ஊரை சுற்றி வந்துள்ளார். கடந்த மூன்று நாள்களாக பித்து பிடித்தவன் போல், காறி துப்பியபடி இருந்துள்ளார். இவரது நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, குடும்பத்தினர் அவரை கண்காணித்துள்ளனர்.

கையில் இருந்த அடையாளத்தை பார்த்து விசாரித்த போது, போதை ஊசிக்கு அடிமையானது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினர் சிறுவனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வியாசர்பாடி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement