சொத்துத் தகராறில் தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரணடைந்தார்.


நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ளது முத்தூரைச் சேர்ந்தவர் பூவைய்யா. இவரது மகன் கணேசன்(45). கடந்த சில நாட்களுக்கு முன்னர், சொத்து ஒன்றிைன ரூ.1.25 கோடிக்கு பூவைய்யா விற்றுள்ளார். அந்தப்பணத்தில் ரூ.60 லட்சத்தை கணேசனிடம் பூவைய்யா கொடுத்தார்.ஆனால், அதுவும் போதாது என எஞ்சிய பணத்தையும் கேட்டு கணேசன் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதனை கொடுக்க பூவைய்யா மறுத்தார்.


இந்நிலையில் அவர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த போது அங்கு வந்த கணேசன் அரிவாளால் தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement