பார்லிமென்டிற்கு வர வேண்டும்; எம்.பி.,க்களுக்கு பா.ஜ.,, காங்., உத்தரவு

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எம்.பி.,க்கள் அனைவரும் கட்டாயம் பார்லிமென்டில் இருக்க வேண்டும் என பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஆக., மாதம் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, அம்மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள், விரிவான ஆலோசனைக்கு பிறகு திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதாவை மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேபோல், 3ம் தேதி ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் எனவும் பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.
காங்கிரசும் உத்தரவு
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், லோக்சபா எம்.பி.,க்களுக்கு நாளை அவைக்கு வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.








மேலும்
-
குத்துச்சண்டை: அரையிறுதியில் ஜடுமானி
-
திக்வேஷ் ரதிக்கு அபராதம்
-
வில்வித்தை நட்சத்திரங்களுக்கு சிக்கல் * விசா கிடைப்பதில் இழுபறி
-
மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம்: மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு
-
ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு தடை; கர்நாடகா ஐகோர்ட் அதிரடி
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பெங்களூரு அணி வெற்றி