கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது

கடலுார்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்; மேலும் சிலரை தேடி வருகின்றனர். கள்ள நோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை பிடிக்க மூன்று தனி படை அமைக்கப்பட்டுள்ளது .
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கு மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த சங்கருக்கு முன் விரோதம்
. வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று செல்வம் வீட்டிற்கு ராம்நத்தம் போலீசார் சென்றனர் அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர் போலீசார் வருவது அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு கள்ள நோட்டுகள் அச்சடித்து இயந்திரம் துப்பாக்கி போலீஸ் சீருடை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .
இதை அடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும் அதர் நத்தம் வீட்டிற்கு வந்து மற்றொருவரையும் போலீஸ் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி அருகே உள்ள ஆலந்தூர் நவீன் ராஜா அதர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக செல்வத்திலும் கார் டிரைவராக வேலை செய்து தெரியவந்தது. அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிரிண்டிங் இயந்திரம் கத்தி அரிவாள் 4வாக்கி டாக்கி 2 ஏர்கன் லேப்டாப் போலீஸ் சீருடை ரிசர்வ் வங்கி முத்திரை கார் லாரிகள் ஜேசிபி எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என செல்வம் உள்பட 11 பேர் தலைமறை ஆகிவிட்டனர். கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
விடுதலை சிறுத்தை கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பதில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அச்சடித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஜம்புலிங்கம் கோபிநாத் ஆகியோர் தலைமையில் மூன்று தனி படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலை இந்த வழக்கில் தொடர்புடைய வடிவேல் பிள்ளை, சக்திவேல், அரவிந்த் அஜித் ஆகிய 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (4)
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
01 ஏப்,2025 - 22:56 Report Abuse

0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
01 ஏப்,2025 - 21:16 Report Abuse
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01 ஏப்,2025 - 20:18 Report Abuse

0
0
Reply
raja - Cotonou,இந்தியா
01 ஏப்,2025 - 17:37 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement