உடுமலை அருகே விஷவாயு தாக்கி ஒடிசாவைச் சேர்ந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

உடுமலை: உடுமலை அருகே தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடக்கிறது.


உடுமலை சடையபாளையத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் பப்பாளி காய் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பதப்படுத்தும் தொட்டியில் பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் பிகால்(25) விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அதே மாநிலத்தை சேர்ந்த அருண் கோமாங்கோ(25) என்பவரும் உயிரிழந்தார்.


தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News

Advertisement