நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்; செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

நேபி டாவ்: மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், செயற்கைக்கோள் உதவியுடன் எடுத்த படங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்க-ம் ஏற்பட்டது. இதனால், வானுயர கட்டடங்கள் சீட்டுக்கட்டுக்களை போல சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரையில 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 3,000க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
3வது நாளாக தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில், நிலநடுக்கத்திற்கு பிறகு மியான்மரில் ஏற்பட்டுள்ள சேதங்களை வெளிப்படுத்தும் விதமாக, செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. அதில், மியான்மரின் முக்கிய பகுதிகளான நேபி டாவ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் சரிந்து விழுந்தது தெரிகிறது. மேலும் மாண்டலேவில் உள்ள ஐராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இன்வா பாலம் இடிந்து விழுந்துள்ளது போன்ற படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும்
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
-
தி. மு. க., போதைப்பொருளை ஒழிக்க 'ஓ' போட்டது போதும்: இபிஎஸ் பாய்ச்சல்