'ஜிப்லி'யால் வந்த சோதனை: உறக்கமின்றி தவிக்கும் ஓபன் ஏஐ ஊழியர்கள்

வாஷிங்டன்: '' சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து உள்ள ஜிப்லி புகைப்படங்களை ஏராளமானோர் உருவாக்கி வருவதால், தங்களது நிறுவன ஊழியர்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும், இதனால் ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்,'' என ஓபன் ஏ.ஐ., சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன் ஏ.ஐ., நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது சாட் ஜிபிடி. இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், தற்போது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படத்தை ஓவியமாக மாற்றும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட ஜி.பி.டி.,-4.0 யில் உள்ள அம்சம் மூலம் புகைப்படத்தில் உள்ள நபர்கள் மற்றும் பின்னணியில் உள்ளவற்றை ஓவியமாக மாற்றும் ஜிப்லி சேவை வந்துள்ளது.
இந்த ஜிப்லி சேவையை எலான் மஸ்க்கின் குரோக் ஏ.ஐ., வழங்கினாலும் ஜிபிடி ஏ.ஐ., தான் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஜிப்லி சேவை மூலம் ஏராளமானோர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ஓவியமாக மாற்றி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். முதலில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு இச்சேவை வழங்கப்பட்டாலும், பிறகு இலவசமாக மாற்றப்பட்டது. இதனால், இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க துவங்கியது. இதனால், ஜிப்லி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அது வைரலாக பரவ துவங்கி உள்ளது. நொடிப்பொழுதில் உருவாகும் இந்த ஜிப்லியை, செல்பி எடுத்தும், செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தும், ஓவியமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: ஜிப்லி படங்களை உருவாக்குவதை கொஞ்சம் நிறுத்துங்கள். எங்கள் குழுவினருக்கும் கொஞ்சம் தேவைப்படுகிறது என பதிவிட்டு உள்ளார்.

மேலும்
-
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்