ஐ.எஸ்.எல்., கால்பந்து: அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர்

ஷில்லாங்: ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதிக்கு ஜாம்ஷெட்பூர் அணி முன்னேறியது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த மோகன் பகான் (56 புள்ளி), கோவா (48) அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடங்களை பிடித்த பெங்களூரு (38), வடகிழக்கு யுனைடெட் (38), ஜாம்ஷெட்பூர் (38), மும்பை (36) அணிகள் அரையிறுதிக்கான 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன் முதல் போட்டியில் பெங்களூரு அணி 5-0 என மும்பை அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேகாலயாவின் ஷில்லாங்கில் நடந்த மற்றொரு 'பிளே-ஆப்' போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஸ்டீபன் ஈஸ் (29வது நிமிடம்), ஜாவி ஹெர்னாண்டஸ் (90+9வது) கைகொடுத்தனர்.

இரண்டு சுற்றுகளாக (ஏப். 3, 7) நடக்கும் அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர், மோகன் பகான் அணிகள் விளையாடுகின்றன. மற்றொரு அரையிறுதியில் கோவா-பெங்களூரு அணிகள் (ஏப். 2, 6) மோதுகின்றன.

Advertisement