டில்லி அணி அசத்தல் வெற்றி: ஐந்து விக்கெட் சாய்த்தார் ஸ்டார்க்

விசாகப்பட்டனம்: ஸ்டார்க் 'வேகம்' கைகொடுக்க, டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
விசாகப்பட்டனத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு இம்முறை அதிரடி துவக்கம் கிடைக்கவில்லை. அபிஷேக் (1) ரன் அவுட்டானார். ஸ்டார்க் ஓவரில் (3வது) இஷான் கிஷன் (2), நிதிஷ் குமார் (0) வெளியேறினர். தொடர்ந்து அசத்திய ஸ்டார்க் பந்தில் 'ஆபத்தான' டிராவிஸ் ஹெட் (22) அவுட்டாக, 4.1 ஓவரில் 37/4 ரன் எடுத்து தத்தளித்தது.
அனிகேத் அரைசதம்: பின் அனிகேத் வர்மா, கிளாசன் போராடினர். கிளாசன், 32 ரன் எடுத்தார். குல்தீப் 'சுழலில்' கம்மின்ஸ் (2) சிக்கினார். அரைசதம் கடந்த அனிகேத் (74, 5X4, 6X6), குல்தீப் பந்தில் மெக்குர்க்கின் கலக்கல் 'கேட்ச்சில்' அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஹர்ஷல் படேல் (5), முல்டரை (9) பெவிலியினுக்கு அனுப்பிய ஸ்டார்க், மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
டுபிளசி விளாசல்: சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு டுபிளசி, மெக்குர்க் நல்ல துவக்க தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். ஜீஷன் அன்சாரி ஓவரில் (10வது) டுபிளசி (50, 3X4, 3X6)), மெக்குர்க் (38) அவுட்டாகினர். ஷமி ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய ராகுல், 15 ரன்னுக்கு வெளியேறினார். பின் அபிஷேக் போரல், ஸ்டப்ஸ் அசத்தினர். முல்டர் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த ஸ்டப்ஸ் விரைவான வெற்றி தேடித் தந்தார். டில்லி அணி 16 ஓவரில் 166/3 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. போரல் (34), ஸ்டப்ஸ் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
200 ஜோரு
நேற்று அசத்திய ஸ்டார்க், 'டி-20' அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். டில்லி அணிக்காக 5 விக்கெட் சாய்த்த முதல் வேகப்பந்துவீச்சாளரானார். இதற்கு முன் 'ஸ்பின்னர்' அமித் மிஸ்ரா (5/17, எதிர் டெக்கான் சார்ஜர்ஸ், 2008) சாதித்து இருந்தார்.
* 'டி-20' அரங்கில் நேற்று 200 விக்கெட் (144 போட்டி) மைல்கல்லை எட்டினார் ஸ்டார்க். பிரிமியர் அரங்கில் 59 விக்கெட் (42 போட்டி) வீழ்த்தியுள்ளார்.
* கிரிக்கெட் அரங்கில் டிராவிஸ் ஹெட்டை 6வது முறையாக (8 போட்டிகளில்) அவுட்டாக்கினார் ஸ்டார்க்.
* டில்லி அணிக்காக 50 விக்கெட் (41 போட்டி) வீழ்த்தினார் குல்தீப்.
'சீனியர்' வீரர்
பிரிமியர் அரங்கில் அரைசதம் எட்டிய இரண்டாவது சீனியர் துவக்க வீரரானார் டில்லி அணியின் டுபிளசி (40 ஆண்டு, 260 நாள்). முதலிடத்தில் கில்கிறிஸ்ட் (பஞ்சாப், 85 ரன், 41 ஆண்டு, 181 நாள், எதிர், பெங்களூரு, 2013) உள்ளார்.
மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது