பயனுள்ள நிகழ்ச்சி பெற்றோர் பாராட்டு குழப்பம் தீர்ந்தது; மாணவர்கள் மகிழ்ச்சி குழப்பம் தீர்ந்தது மாணவர்கள் மகிழ்ச்சி

ஏ.ஐ., குறித்து விளக்கம்



என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தோடு, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தேன். இங்கு, ஏ.ஐ., பயன்பாடு குறித்து விளக்கினர். எந்த பாடப்பிரிவுகள் எடுத்தாலும், கூடுதலாக ஏ.ஐ., படிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏ.ஐ., ரோபோடிக் குறித்து தெளிவாக விளக்கினர்.

ஹரிபிரியா, தவளக்குப்பம், புதுச்சேரி.

மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி:



இங்கு வரும் முன் அடுத்து, என்ன படிப்பது என தெரியாமல் இருந்தது. தினமலர் வழிகாட்டியில், பங்கேற்ற பிறகு மேற்படிப்பில் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து முழுமையான தெளிவு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் தொடர்ந்து நடத்தி, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

பூஜா ஸ்ரீ, புதுச்சேரி.

சிறந்த ஆலோசனைகள்



எந்த ஐடியாவும் இல்லாமல், இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. எந்த பாடப்பிரிவு எடுத்தால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என விளக்கினர். பொறியியல் துறையில் அதிகளவிலான புதிய தொழில்நுட்பகள் வந்துள்ளது குறித்தும், அவற்றை படித்தால் கிடைக்கும் பயன்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

மகாலட்சுமி, விழுப்புரம்.

Advertisement