மாடியில் அடிதடி கீழே விழுந்தவர் உயிரிழப்பு
ஐ.சி.எப்., அயனாவரத்தில், மூன்று மாடி கட்டடம் புதுப்பிக்கும் பணியில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துர்கேஷ் குப்தா, 40, விர்ஜிஷ், 27, ஆகிய இருவரும் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர்.
மொட்டை மாடியில் நின்று இருவரும் பேசியபோது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
துர்கேஷ் குப்தா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் இருந்த விர்ஜிஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலையோர பள்ளத்தில் மண் அணைக்க கோரிக்கை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி
-
கரடுமுரடான பச்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
மதுரை வந்த ரயில் பெட்டியில் புகை அபாய சங்கிலியை இழுத்த பயணிகள் காட்டுப் பன்றி உடல் சிக்கியது கண்டுபிடிப்பு
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி
-
பள்ளியில் பூஜ்ய கழிவு மேலாண்மை வேளாண் மாணவியர் விழிப்புணர்வு
Advertisement
Advertisement