சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்

சென்னை, மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக, 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகியுள்ளது. இது, கடந்தாண்டை விட, 100 கோடி ரூபாய் அதிகம்.

மாநகராட்சி வருவாய் அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில், 2022 -23ம் நிதியாண்டில், 1,572.84 கோடி ரூபாய்; அடுத்தடுத்த நிதியாண்டில், 1,755.95 கோடி ரூபாய்; 2,023 கோடி ரூபாய் என்ற அளவில் சொத்து வரி வசூலானது.

அதேபோல், 2024 - 25 முதல் அரையாண்டில், 879 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக, இரண்டாம் அரையாண்டில், 1,244 கோடி ரூபாய் என, 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது.

Advertisement