கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சென்னை ஷெனாய் நகர், மெரினா கடற்கரை, வேளச்சேரி ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் செயல்படுகின்றன.

இவற்றில், 12 நாட்களுக்கான, கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. இதற்கு, 2,360 ரூபாய் கட்டணம்.

அடுத்தடுத்த வகுப்புகள், 15 - 27; ஏப்., 29 - மே 11; மே 13 - 25; மே 27 - ஜூன் 8 வரை நடக்க உள்ளன.

பயிற்சியில் சேர, 'https//www.sdat.tn.gov.in/' என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 74107 03480 என்ற மொபைல் எண்ணிலோ, 044 - 2664 4794 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement