மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

கடலுார் : மறைந்த முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி உருவ படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம், முன்னாள் மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி. இவர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க., அவைத் தலைவர், அகரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்தார். கடந்த 15ம் தேதி அவர் இறந்தார்.
இவரது உருவ படம் திறப்பு நிகழ்ச்சி சொந்த ஊரான அரசாக்குப்பம் கிராமத்தில் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம், மறைந்த நாராயணசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், புகழேந்தி, வடலுார் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், துணை தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் சங்கர், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரவீன்குமார், கருணாகரன் நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
-
பேட்டரி திருடியோர் சிக்கினர்