ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது

புதுச்சத்திரம் : பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுாரைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் ஆனந்தராஜ், 30; இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, 25,000 ரூபாயை இளம்பெண் ஒருவரிடம் கடன் வாங்கினார். சில மாதங்களுக்கு முன் இளம்பெண், கடனை திருப்பிக் கேட்டார்.

ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அப்பெண் தனது வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்த, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நேற்று அவரது மொபைலுக்கு அனுப்பினார். புகாரின் பேரில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து, விசாரித்து வருகிறார்.

Advertisement