கிரிக்கெட்: பார்வதீஸ் வெற்றி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லுாரிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியில் பார்வதீஸ் கல்லுாரி வென்றது.
லீக் போட்டிகள் என்.பி.ஆர்.,,ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் பார்வதீஸ் ஆர்ட்ஸ் கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 184/4. ஸ்ரீராஜ் 51, தென்பாண்டி 37, நிதீஷ் 37, க்ரித்திக்ரோஷன் 30. சேசிங் செய்த பழநி ஏ.பி.ஏ., ஆர்ட்ஸ் கல்லுாரி 16.5 ஓவர்களில் 76 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. கவுதம் 4, சுஜித் 3 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் யுனிவர்சிட்டி பொறியியல் கல்லுாரி அணி 12.5 ஓவர்களில் 46 க்கு ஆல்அவுட் ஆனது. விமல்சஞ்சய் 5 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 5.3 ஓவர்களில் 47/1 எடுத்து வென்றது.
திண்டுக்கல் எஸ்.பி.எம்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 15 ஓவர்களில் 45 க்கு ஆல்அவுட் ஆனது. ராஜேஷ்கண்ணன் 4, கோகுல்கிருஷ்ணன் 3 விக்கெட். சேசிங் செய்த ஜி.டி.என்., கல்வி குழும அணி 2.3 ஓவர்களில் 46/0 எடுத்து வென்றது. நவீன்குமார் 33(நாட்அவுட்).
மேலும்
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
-
பேட்டரி திருடியோர் சிக்கினர்